19 Feb 2017

சி-3 (சிங்கம் 3)


சி-3 (சிங்கம் 3)
            தற்போதைய அரசியல் களேபரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது சி-3 என்ற சிங்கம் - 3 படமாகத்தான் இருக்கும்.
            இயக்குநர் ஹரியின் திரைக்கதையை விஞ்சும் வகையில் அரசியல் சூழ்நிலைகள் படுவேகம் எடுத்து விட்டதால் சிங்கம்-3 ஐ தவற விட்டு விட்டோம்.
            செய்திச் சேனல்களும் பாவப்பட்ட வகையறாத்தான். நான்கைந்து ஆண்டுகளில் வரக்கூடிய பிரேக்கிங் நியூஸ்கள் எல்லாம் நான்கைந்து நாள்களிலே வந்துப் போக களைத்துப் போய் விட்டன.
            நாட்டில் வாழும் மனிதர்கள், காட்டில் வாழும் மிருகங்கள் ரேஞ்சுக்கு இருப்பதால் இயக்குநர் ஹரியும் அதற்கேற்றாற் போல் சூர்யாவை சிங்கமாக உலவ விட்டு இருக்கிறார்.
            சிங்கம் தனித்து வேட்டையாடுவது போல் சூர்யாவும் தனித்து வேட்டையாடுகிறார். நாம் முயல் குட்டிகளாகவும், பூனைக் குட்டிகளாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடைசிப் பாய்ச்சல் நம் மீதுதான்!
            அயல்நாட்டு குப்பைக் கழிவுகள் என்ற புதிய லைனைப் பிடித்து இருக்கிறார்கள். மற்றபடி அரைத்த மாவையே அரைக்கும் ஹீரோயிச மசாலா குப்பைகளில் ஒன்றாக, கோடம்பாக்கத்து குப்பைக் கழிவுகளில் கூடுதலாக சேர்கிறது இந்த சி-3.
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...