10 Jan 2017

கலா ரசிகர்கள்


நிழல் தேடல்
சாலையோர மரங்களை
வெட்டிய பின்
நிழல் தேடி ஒதுங்க
விரும்புகிற நாம்
சற்றுக் கூடுதல்
நிழலைத் தேடுகிறோம்
நாம் ஓட்டிச் செல்லும்
வாகனங்களுக்கும் சேர்த்து!
*****

கலா ரசிகர்கள்
சேலை விலகியிருந்ததையும்
இரவிக்கை கிழிந்திருந்ததையும்
அய்யே என முகம் சுளிப்பதையும்
பார்த்து ரசித்தவர்கள்
புணர்ச்சி பொறுக்க முடியாத
உணர்ச்சி வேகத்தில்
அனுபவித்தும் முடித்தார்கள்!
ப்ளாட்பாரத்தில் இல்லாது
வீடொன்று இருந்திருந்தால்
தப்பித்து இருக்கலாம்
அந்த கொடிய இரவில்
காமப்பால் பருகும்
கலா ரசிகர்களிடமிருந்து!
*****

தெரிதல்கள்
கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறார்
என்று
பால்காரரிடம் தெரிகிற ஒன்று
தெரியாமலே போகிறது
அளவு குறைவாகவே
வந்து கொண்டிருக்கும்
பாக்கெட் பாலில்.
*****

No comments:

Post a Comment