10 Jan 2017

கடவுளே!


கடவுளே!
"எல்லாத்தையும் மேல ஒருத்தன் பார்த்துகிட்டு இருக்கான்!" என்று புலம்பிக் கொண்டே போனவனுக்குத் தெரியுமோ, தெரியாதோ அது கண்காணிப்புக் கேமிரா என்று.
*****

கஷ்டம்
ஏ.டி.எம்.மில் கத்தை கத்தையாகப் பணம் நிரப்புபவர்க்கு இருக்கக் கூடும் பணக் கஷ்டம்.
*****

வாசகம்
"குடிநீரை வீணாக்காதீர்கள்!" என்று எழுதப்பட்டிருந்த சுவரை உடைத்துக் கொண்டு ஓடியது வெள்ளம்.
*****

கொலை
"நம்மள போட்டுத் தள்ள முடிவு பண்ணிட்டாங்க!" என்று ஆனந்தி சொல்ல, "நம்ம காதல் உங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சா?" என்றான் இளவரசன்.
*****

No comments:

Post a Comment