ஆட்சி
"காமராஜர் ஆட்சி அமைப்போம்!" என்ற
முழக்கத்தைச் சொர்க்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த காமராஜர் மனதுக்குள் நினைத்துக்
கொண்டார், "அப்புறம் ஏம்பா 1967 ல தோற்கடிச்சீங்க?"
*****
சாதி
கெளரவ கொலை செய்து விடலாம் என்ற நம்பிக்கையில்
கேட்ட அப்பா அதிர்ந்து போனார், பையன் ரத்தக் காட்டேரி இனம் என்றதும்.
*****
ஆம்பள
"ஆம்பளடி! நான் குடிப்பேன்!" என்று
தெனாவெட்டாக மனைவியை அடித்தவனுக்கு பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை.
*****
வாஸ்து
வாஸ்து பார்த்து கட்டிய வீட்டிற்குக் குடி வந்ததும்,
வாங்கிய நகைகள் எல்லாம் அடமானத்திற்குப் போயின.
*****
No comments:
Post a Comment