11 Jan 2017

உடனடி ஆணை


ஏதாவது ஒண்ணு
நான்கு சேனல்களில் நான்கு விதமான சீரியல்கள் பார்த்த பின் அம்மா அலுத்துக் கொண்டாள், "இட்லியா? தோசையா? எதையாவது ஒண்ணைச் சொல்லுடா!"
*****

நாள் கணக்கு
படம் எடுக்க நாற்பது நாள்கள் எடுத்துக் கொண்ட இயக்குநர் ராஜ்சுந்தர் டிரெய்லர் ரெடி பண்ண நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டார்.
*****

வாட்ஸ் அப் நம்பர்
கையில் கீபேட் மொபைல் வைத்திருந்தவர் தயங்கியபடி கேட்டார், "வாட்ஸ் அப் நம்பர்னா என்னப்பா?"
*****

உடனடி ஆணை
எதற்கெடுத்தாலும், "இம்மீடியட்டா வாட்ஸ் அப்ல போட்டு விட்டுடுங்க!" என்று விரைவுபடுத்தும் மேனேஜர், ப்ரமோஷன் ஆர்டரைப் பேப்பரில் போட்டுக் கொடுத்தார் பத்து நாள்கள் கழித்து.
*****

No comments:

Post a Comment