கலர்
கலர் அடிக்கணும்னு
சொன்ன
அம்முக்குட்டிக்காக
வண்ணங்கள்
வாங்கிக் கொடுத்த பின்
அம்முக்குட்டி
கேட்டாள்,
"கலர்
அடிக்கணும்
வண்ணத்துப்
பூச்சிகள் எங்கே?"
*****
முட்டாள்தனமற்ற வாழ்க்கை
அவர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
முட்டாள்தனமான
வாழ்க்கைக்கு
பாராட்டுப்
பத்திரம் வாசிக்கச் சொல்வார்கள்.
அதன்
பின்
பாராட்டுப்
பத்திரங்கள்
காற்றில்
பறக்கும்
கரையான்கள்
வயிற்றில் இருக்கும்.
வாழ்வு
என்பது என்னவென்று புரிந்து விட்டால்
முட்டாள்தனங்கள்
உதிர்ந்து விடும்.
அவர்களுக்கு
அது தெரியும்,
அதனோடு
வாழ்ந்து பழகி விட்டதால்
அதை
விட்டு வெளியே வர
அவர்கள்
பிரியப்பட மாட்டார்கள்.
நிறைய
பத்திரங்களைத் தயாரித்துக் கொள்ளுங்கள்
நீங்கள்
பாக்கியசாலிகளாக இருப்பீர்களாக!
*****
No comments:
Post a Comment