10 Jan 2017

ஆயிரம் பாக்கெட்டுகள்


தரிசனம்
செல்பி எடுத்துக் கொண்டதும், தரிசனம் முடிந்ததெனக் கிளம்பினான் செந்தில் முருகன்.
*****

ஓடி விளையாடு!
"ஓடி விளையாடு பாப்பா!" எழுதிய பாரதி சிரித்துக் கொண்டார், போகிமான் விளையாடும் குழந்தையைப் பார்த்து.
*****

கற்க! கற்ற பின்...?!
டி.வி.யில் பார்த்த ரெசிபியைச் செய்து பார்த்து விட்டு கிளம்பினார்கள் ஹோட்டலில் சாப்பிட.
*****

ஆயிரம் பாக்கெட்டுகள்
முண்டகன்னி அம்மனிடம் ஆயிரம் பேருக்கு கூழ் காய்ச்சி ஊத்துவாக வேண்டிக் கொண்டவன், ஆயிரம் பாக்கெட்டுகள் போட்டு டெம்போவில் அனுப்பினான்.
*****

No comments:

Post a Comment