10 Jan 2017

உச்


பொருட்டு
கொல்லை மாற்றி
கொல்லை செல்லும்
பறவைக்கு
வேலி ஒரு பொருட்டில்லை.
*****

உச்
"மின்விசிறியில்தான்
தூக்கிலிட்டு இறப்பேன்
என்று கூறி விட்டு
ஏன் பதினாறாவது மாடியிலிருந்து
குதித்தாய்?"
என்று கேட்டான்
தூக்க மாத்திரைகளை விழுங்கிச்
சாகப் போவதாகச் சொல்லி
தண்ணீர் லாரியில் அடிபட்டுச் செத்தவன்.
ஓடிக் கொண்டிருந்த
மின்விசிறியை நிறுத்தத் தெரியாமல்
குதித்ததாகச் சொன்னவன்,
"அந்நேரம் பவர்கட் இருந்திருந்தால்
இப்படி அடிபட்டுச்
செத்திருக்க மாட்டேன்!" என்று
கொட்டிக் கொண்டான்,
"உச்!"
*****

No comments:

Post a Comment