10 Jan 2017

நோ மணி!


நோ மணி!
"பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்க!" என்று பிரச்சாரம் செய்து கொண்டு போனார், கூட்டணியில் சேர பெட்டிகளை வாங்கிக் கொண்ட தலைவர்.
*****

வயற்காட்டுப் பொம்மை
வயல்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக ஆனதில் வயற்காட்டு பொம்மையைக் காட்ட முடியாமல், மகனை ஏமாற்றத்துடன் அழைத்து வந்தார் செல்லப்பன்.
*****

கமெண்ட்
"படம் சூப்பர்!" நெட்டில் கமென்ட் போட்டான், நெட்டில் படம் பார்த்தவன்.
*****

நெரிசல்
கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி கொலை செய்தவன், அனைவரும் வழி விட சாவகாசமாக வெளியேறினான்.
*****

வருத்தம்
"ஸ்கைப்பில் கூட ரெண்டு நிமிசம் பேச மாட்டேங்றான்!" வருத்தப்பட்டுக் கொண்டார் அமெரிக்காவுக்காக மகனைப் பெற்றெடுத்த இந்தியத் தந்தை.
*****

No comments:

Post a Comment