ஓட்டு
ஓட்டுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் வாங்கிக்
கொண்டு ஓட்டைப் போட்டான் நோட்டாவில்.
*****
பேரம்
இளநீர்க்காரனிடம் பேரம் பேசியவர், எதுவும் பேசாமல்
வாங்கிக் குடித்தார் பன்னாட்டு குளிர்பானத்தை.
*****
பிரியாணி
"மாசா மாசம் தேர்தல் வந்தா சூப்பரா இருக்கும்ல!"
என்றான் ஆசை ஆசையாக பிரியாணி சாப்பிட்ட மகன்.
*****
பற்று
ஆறு ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார்
தமிழினத் தலைவர் கே.பி.தங்கராசு.
*****
No comments:
Post a Comment