9 Jan 2017

கொன்ற பாவம்


கொன்ற பாவம்
உடைத்து ஊற்றும்
முட்டைகள் ஒவ்வொன்றிலும்
குஞ்சுகளின் பாவம் சூழ்கிறது.
குழந்தையொன்று
அங்கும் இங்கும் சிந்தி
உதடுகளில் ஒட்டி
ருசித்துத் தின்கையில்
கழுவப்பட்டு விடுகிறது
குஞ்சுகளின் மன்னிப்பில்
கொன்ற பாவம்!
*****

வாடல்
பேரம் படியாதப் பொழுதுகளைப்
பரிகசித்தபடியே
வாடிக் கொண்டிருக்கின்றன
மலர்ச்சியான
மலர்கள்!
*****

கிடைத்தல்
கடும் முயற்சிக்குப் பின்
கிடைக்காமல் போகலாம்
வெற்றி!
கிடைக்காமல் போகாது
அனுபவம்!
*****

No comments:

Post a Comment