முடிவு
"ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ ஓட்டுக்கு
ஒத்த பைசா கொடுக்கக் கூடாது!" தீர்க்கமாக முடிவு செய்து கொண்டார் கட்சித் தலைமையிடமிருந்து
பணப்பெட்டியை வாங்கிக் கொண்ட முனுசாமி முத்தைய்யா.
*****
மெம்பர்
ஒரு லோடு மணல் அடித்துக் கொடுத்து, கோயில்
கமிட்டியின் மெம்பரானார், லோடு லோடாய் ஆற்று மணல் அள்ளிய ஏகாம்பரம்.
*****
ஆயிரம்
ஆயிரம் கண்ணுடையாளை அனுதினமும் வணங்கிச் செல்கிறார்,
ஆயிரம் தவறுகளையாவது செய்திருக்கும் அமைச்சர்.
*****
வேண்டல்
சாமியை வேண்டிக் கொண்டான் அவன், திருடப் போகும்
காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று.
*****
No comments:
Post a Comment