காதல்
சொன்னாலும் தோற்கும்
சொல்லாமலும் தோற்கும்
காதல்
தேடிக் கொள்ளும்
இன்னொரு காதலை!
*****
துண்டு துண்டாக
போதி
மரத்தின் அருகே
குண்டு
வெடிக்கிறது!
ஞானம்
பெற்ற புத்தர்
துண்டு
துண்டாகச்
சிதறி
விழுகிறார்!
ஆளுக்கொரு
துண்டு
பொறுக்கிக்
கொண்டதில்
அங்கங்கே
இருக்கிறார்
புத்தர்
இருப்புத்
தொலைத்து
துண்டு
துண்டாக!
*****
ருசி
பறவைகள்
ருசித்த பின்
பழங்கள்
மரங்களாகின்றன!
*****
No comments:
Post a Comment