12 Jan 2017

ஆபர் வேணுமா? புது கஸ்டமராகிடு!


ஆபர் வேணுமா? புது கஸ்டமராகிடு!
            பழசுகளுக்கு (பெருசுகள்) ஏது மரியாதை? இளசுகளுக்கே மரியாதை.
            செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும் இதையே கடைபிடிக்கின்றன. பழைய கஸ்டமர்களைக் கஷ்டபடுத்தி ஆபர்களை காசு கொடுத்து வாங்க வைக்கின்றன. புதிய கஸ்டமர்களுக்கு அவைகள் இலவசமாக வாரி வழங்கப்படுகின்றன.
            இதில் இருக்கிற ஒரு வசதி என்னவென்றால், பழசுகள் (பெரிசுகள்) இளசுகளாக மாற முடியாதே தவிர, பழைய கஸ்டமர்கள் புதிய கஸ்டமர்களாகி விடலாம்.
            எப்படி என்றால், பழைய சிம்மை கடாசி வீசி விட்டு, புதிய சிம் வாங்கி விட்டால் நீங்களும் புதிய கஸ்டமர்தானே. இப்போது உங்களுக்கு அனைத்து ஆபர்களும் கிடைத்து விடும்.
*****

No comments:

Post a Comment