12 Jan 2017

காரணம்


காரணம்
கோயிலுக்குள் வர மறுத்த மகன் காரணம் சொன்னான், "கோயிலுக்குள்ள கேமிராவில் படம் பிடிக்கக் கூடாதுன்னா அப்புறம் நான் எப்படி செல்பி எடுத்துக்கிறது?"
*****

சம்பளம்
படத்தில் வேலையில்லாத இளைஞனாக நடிப்பதற்காக ஹீரோ கேட்டார் பத்து கோடி சம்பளம்.
*****

நம்பிக்கை
போட்டித் தேர்வில் தோற்ற முகுந்தன் நம்பிக்கையோடு ஆரம்பித்தான் கோச்சிங் சென்டர்.
*****

காவல்
வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட காதலி வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள்.
*****

No comments:

Post a Comment