முறைகள்
மற்றொரு
முறை
வர மாட்டார்கள்
என்பதில்லை
இந்த
ஒரு முறை மட்டும்
என்று
வருபவர்கள்!
*****
அவர்கள் செய்வதெல்லாம்
ஒருத்தரிடம்
ஒரு விசயத்தை எதிர்பார்ப்பது போன்ற
மடத்தனம்
எதுவுமில்லை
ஒருத்தர்
மேல் நம்பிக்கை வைப்பதைப் போன்ற
முட்டாள்தனம்
எதுவுமில்லை
விரைவிலே
எதிர்மறையாக நிகழ்ந்து
மனதை வருத்தக்
கூடியவைகள் அவைகள்
அவர்கள்
நம்பிக்கை தருவதைப் போல்
சோகத்தை
அதிகமாக்குபவர்கள்
நம்பிக்கை
அவநம்பிக்கை ஆவதற்குக் காரணம்
அவர்கள்
தந்த அபிப்ராயங்கள், கருத்துகள்
அவர்கள்
தங்கள் மனதில் உள்ளதை
பிறர் மேல்
திணிக்கும் வன்புணர்ச்சியாளர்கள்
அவர்கள்
எதிர்பார்ப்பது போல் நடக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கும்
தீவிரவாதிகள்
தங்களிடம்
உள்ள முட்டாள்தனங்களை மறைத்துக் கொண்டு
அதை நாம்
வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்
அவர்களிடமிருந்து
எதையும் எடுத்துக் கொள்ளாவிட்டால்
எந்த துன்பத்தையும்
நாம் எடுத்துக் கொள்வதில்லை
அவர்களிடமிருந்து
எதையாவது எடுத்துக் கொண்டால்
ஒரு துன்பத்தைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களாவோம்
அந்த முட்டாள்களால்
என்ன செய்ய முடியும்?
அதிகபட்சம்
அவர்களைப் போல ஒரு முட்டாளாக நம்மை மாற்றுவதைத் தவிர.
*****
No comments:
Post a Comment