14 Jan 2017

மாப்பிள்ளை வில்லன்


அங்குசம்
"யானை வாங்கிட்டு அங்குசம் வாங்க என்னடா யோசனை?" என்று கையில் இருந்த பணத்திற்கு செல்போன் வாங்கிக் கொண்டு செல்பி ஸ்டிக் வாங்கி வராத மகனைத் திட்டினார் சேஷகோபாலன்.
*****

சூப்பர்
சூப்பர் ஹீரோவிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த, சூப்பர் ஹீரோவின் மனைவியைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.
*****

மாப்பிள்ளை வில்லன்
வில்லன் என்று தெரிந்தும் மகள் விருப்பப்படி மணம் முடித்துக் கொடுத்தார் ரத்தினசாமி, சினிமா வில்லனான முத்தரசனை.
*****

டிஸ்ட்ரிப்யூசன்
"போட்ட பணத்தை எடுத்திடலாமா?" சந்தேகமாய்க் கேட்டான், ஆயிரத்து ஐநூறு பிரிண்ட் வரை போட்ட திருட்டு டிவிடிக்காரன்.
*****

No comments:

Post a Comment