கடைசி செல்பி
டூவீலரில்
ஹைஸ்பீடில் சென்று கொண்டே ரோஹித் சாவதற்கு முன் கடைசியாக எடுத்த செல்பியில் மங்கலாக
எருமை மாடும், அதன் மீது ஓர் உருவமும் தெரிந்தது.
*****
அறை
"ஏன்டா
எதிர்வீட்டுப் பையனை அறைஞ்சே?" என்று தன் பையனை ஓங்கி ஒரு அறை விட்டார் அப்பா.
*****
கடைசி
"அடுத்த
வேளைச் சாப்பாட்டிற்கு என்ன பண்ணப் போறேனோ?" என்ற படியே கடைசி மாத்திரையை விழுங்கி
முடித்தார் சுகர் பேஷண்ட் சுந்தரேசன்.
*****
மகிழ்ச்சி
திருட்டு
டிவிடியில் கபாலி படம் பார்த்து முடித்த அவர்கள் திருப்தியாகக் கத்தினார்கள்,
"மகிழ்ச்சி!"
*****
No comments:
Post a Comment