ஒரு கிளாஸ் டீ
கடனைக்
காரணம் காட்டி
ஒரு கிளாஸ்
டீ
மறுக்கப்பட்டதையொட்டி
மற்றொரு
கடையில்
துவங்குகிறான்
தனக்கான
டீ கணக்கை!
கடன்தான்
என்றாலும்
தனக்கான
ஒரு கிளாஸ் டீயை
ஒரு சொட்டு
விடாமல்
உறிஞ்சிக்
குடிக்கிறான்,
ஏதேனும்
ஒரு நாளில்
கடனைக்
காரணம் காட்டி
இங்கும்
டீ மறுக்கப்படலாம்
என்ற
பிரக்ஞை
ஏதுமின்றி!
*****
இன்னொரு மரம்
பறவை
உட்கார்ந்து சென்ற
மரம்
இன்னொரு
மரமாகிறது!
*****
பறத்தல்
பறவைகள்
வயிற்றில்
விதைகள்
வடிவில்
பறந்து
செல்கின்றன
மரங்கள்!
*****
No comments:
Post a Comment