15 Jan 2017

புக்கிங்


வேண்டுதல்
"மழை பெய்யணும்னு கொடும்பாவிக் கட்டி இழுக்கிறப்பவே, வெள்ளமா போயிடக் கூடாதுன்னு படகு கட்டியும் இழுத்திடம்ப்பா!" என்றார் நாட்டாமை.
*****

நிறைவேறல்
மழை வேண்டி யாகம் செய்த இடம் எங்கும் வேள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது, வேண்டியபடியே இரண்டு நாள்களாக விடாது பெய்த மழை.
*****

புக்கிங்
மகளுக்கு எல்.கே.ஜி. சீட் வாங்கி விட்டதைப் பெருமையுடன் பதிவிட்டான், அட்வான்ஸ் புக்கிங் ஆபிஸில் வேலை பார்க்கும் முன்னா.
*****

மாறாதது
வாங்கி அடிக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் போலவே, டேளன்லோட் செய்யப்பட்டிருந்த இ-புக்குகளும் படிக்காமல் அப்படியே இருந்தன மோகனின் மொபைலில்.
*****

No comments:

Post a Comment