ஒரு குளம்
ஒரு குளத்தில்
இருக்கின்றன
நீந்தத்
தெரிந்த
மீன்களும்
நீந்தத்
தெரியாத
தாமரைகளும்!
*****
வெறுங்கூடு
சேரத்து
வைத்த
கூட்டில்
முட்டைகளுமில்லை
தேனுமில்லை
கூடு
நிறைய
இறைந்து
கிடக்கின்றன
ஏமாற்றுக்காரர்கள்
தவற விட்டுப்
போன
கைரேகைகள்!
*****
கனிதல்
கரடு
முரடான
பாதைகளை
வேர்கள்
கடந்து
சென்ற பின்
கனிந்து
குலுங்குகிறது
மரம்!
*****
No comments:
Post a Comment