மிருகங்கள் வாழ் காடு
காடுகளை
வெட்டிய பின்
கொடிய
வகை
மிருகங்கள்
அபார்ட்மெண்டுகளில்!
*****
உயிர்ப்பூ
சிறு
தீண்டலில்
நீ உன்னை
மறந்தாய்
நான்
என்னை மறந்தேன்
நாம்
நம்மை மறந்தோம்
ஒரு உயிர்ப்பூ
மலர்ந்தது
பூமியில்
இதை உணர்ந்த
எத்தனையாவது
பிரஜைகள்
நாம்
என்ற கேள்வி
இன்னும்
மனதுக்குள் இருக்கிறது
எனக்கு!
எண்ணிக்கைப்
பற்றிய
எண்ணம்
ஏதுமின்றி
இன்னொரு
உயிர்ப்பூவின்
பூத்தல்
குறித்த
சாகச
கற்பனை இருக்கிறது
உனக்கு!
*****
No comments:
Post a Comment