15 Jan 2017

தந்தையுமானவன்


வேற இடம்...?!
"வேற இடம் கிடைக்கலையா உங்களுக்கு?" என்று திட்டினான் மணல் லாரிக்காரன், ஆற்றோரமாய் ஆடிப்பெருக்கைக் கொண்டாடிக் கொண்டிருந்த பெண்டிர்களை.
*****

தந்தையுமானவன்
ஆசையோடு கரும்பு ஜூஸ் கேட்ட மகளை முறைத்துப் பார்த்தான் பாண்டியன், குவார்ட்டருக்காகப் பையில் வைத்திருந்த பணத்தைத் தடவியபடி.
*****

கம்ப்ளீட் ரெஸ்ட்
"கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்!" என்று டாக்டர் சொன்னதும், வாட்ஸ் அப்பிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்தார் பன்னீர்செல்வம்.
*****

நெக்ஸ்ட்
சாமி படக் கதை சொல்ல வந்த கவிச்செல்வன், "எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!" என்று தயாரிப்பாளர் சொன்னதும், பேய்ப்படக் கதை சொல்ல ஆரம்பித்தான்.
*****

No comments:

Post a Comment