பைரவா - பை நிறைய ரவா
கில்லி
படத்தில் இக்கட்டில் சிக்கும் திரிஷாவுக்கு உதவி செய்வார் இளைய தளபதி விஜய்.
பைரவா
படத்தில் இக்கட்டில் சிக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு உதவி செய்கிறார் இளயை தளபதி விஜய்.
அடுத்த
படத்தில் இக்கட்டில் சிக்கும் லெட்சுமி மேனனுக்கோ, மஞ்சிமா மோகனுக்கோ உதவி செய்வார்
இளைய தளபதி விஜய்.
கத்தி,
வேலாயுதம்,
துப்பாக்கி,
தெறி
என்று சமூக மாற்றத்தை தன் கதைகளில் விஜய் முன்னிறுத்துகிறார். ஆனால் இவ்வாறு தேர்ந்தெடுத்து
நடிக்கும் அத்தனை கதைகளிலும் எந்த மாற்றமும் இல்லை.
அவரது
படங்களைப் பார்க்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் எந்த வித உருப்படியான
நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. தனிமனித சாகசங்கள்
மூலம் இந்த நாட்டுக்குக் கதி மோட்சம் என்ற கருத்து பதிய வைக்கப்படுகிறது.
அவதார
மூர்த்தியான திருமாலே பத்து அவதாரங்களோடு கணக்கை முடித்துக் கொண்ட போதும், விஜய்
தொடர்ந்து கணக்கில்லாமல் பற்பல அவதார மூர்த்தியாக தன் படங்களில் அவதரித்துக் கொண்டே
இருக்கிறார்.
அவரது
ஆக்சன், டான்ஸ்க்கு நாம் ரசிகர்களாக இருக்கிறோம். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும்,
காட்சி அமைப்புகளுக்கும் நாம் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு விஜய் இனி
கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த
வகையில் பார்த்தால் சமூக அநீதிகள் இருக்கும் வரை விஜய் இருப்பார். அதை ஒவ்வொரு படத்திலும்
தட்டிக் கேட்பார். அந்த நம்பிக்கையிலேயே நம் சமூகமும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்காமல்
விஜய் படம் பார்த்துக் கொண்டிருக்கும்.
தனது
அடுத்தப் படத்திற்கான சமூக அநீதியை இந்நேரம் விஜய் கையில் எடுத்திருப்பார். அல்லது,
விஜய்க்காக அவரது இயக்குநர்கள் கையில் எடுத்து இருப்பார்கள்.
மற்றபடி,
தலைப்பில் சொன்னபடி, பைரவா - பை நிறைய ரவா!
*****
செம
ReplyDelete