நுகர்வு
10 ஜி.பி.
இலவசம் என்றதும் அந்த நிறுவனத்தின் சிம்மை வாங்குவதென முடிவெடுத்தார் அரவிந்த்.
*****
வாங்குதல்
"கார்
வாங்கியாச்சு! நெக்ஸ்ட் டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும்!" என்று கையில் பணத்துடன்
ஏஜென்டைப் பார்க்கப் புறப்பட்டான் மகேஷ்.
*****
திருட்டு
கடையில்
நடந்த திருட்டை எப்படி போலீசில் புகார் கொடுப்பது என யோசித்துக் கொண்டு இருந்தார்
திருட்டு டிவிடி கடைக்காரர்.
*****
ஒரிஜினல் பேய்ப்
படம்
ஹீரோ,
ஹீரோயின், வில்லன், தயாரிப்பாளர் என எல்லாரையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை
செய்து கொண்டார் ஒரிஜினல் பேய்ப் படம் எடுக்க விரும்பிய டைரக்டர் மித்ரன்.
*****
No comments:
Post a Comment