15 Jan 2017

சரக்குகள்


சரக்குகள்
சாசுவதமாய் இல்லை
என்பதற்காக
அரை கிலோ அன்பையும்
பத்தரை கிலோ பாசத்தையும்
கடையில் வாங்கிக் கொண்டேன்!
விலைதான் அதிகமாய்ச்
சொல்லப்பட்டது!
பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில்
வாங்கி வைத்தால்
பிற்காலத்தில்
நல்ல விலை போகும்
வாங்கி வைத்த
அன்பும் பாசமும்!
*****

விருப்பங்கள்
குளத்திற்குள்ளோ
அதற்கு வெளியோ
அது
தவளைகளின் விருப்பம்!
குளமா
அது
கூறு போட வேண்டிய
நிலமா
என்பது
அங்கே தவளைகளை
வாழ விடும்
மனிதர்களின் விருப்பம்!
*****

No comments:

Post a Comment