28 Jan 2017

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்தால்...


அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்தால்...
            திருட்டு டி.வி.டி. மற்றும் டோரன்டுகளால் திரைத்துறை பாதிக்கப்படுகிறது என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.
            சரி, இதற்காகவாவது படம் பார்க்கப் போகலாம் என்று டூவீலரை எடுத்துக் கொண்டு கிளம்பினால், டூவீலருக்கு பார்க்கிங் சார்ஜ் 20 ரூபாய் போடுகிறார்கள்.
            பரவாயில்லை என்று டிக்கெட் எடுக்கப் போனால் 18 ரூபாய் 25 பைசா (நிஜமாகவே ஓர் ஆர்வக் கோளாறில் சட்டப் போராட்டம் நடத்தி அதன் மதிப்பில் டிக்கெட் காசைக் கொடுப்பது என்றால் அந்த 25 பைசாவை எப்படிக்கொடுப்பது தல?) மதிப்புள்ள டிக்கெட்டை 120 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள்.
            பத்து ரூபாய் மதிப்புள்ள பாப்கார்னை இருபது ரூபாய் என்கிறார்கள். ஐந்து ரூபாய் சமோசாவை பத்து ரூபாய் என்கிறார்கள். எம்.ஆர்.பி. 10 ரூபாய் உள்ள பிஸ்கெட் பாக்கெட்டை இருபது ரூபாய் என்று மனம் கூசாமல் விற்கிறார்கள்.
            இதையும் தாண்டிப் போனால், ப்ளாக் டிக்கெட் விற்கிறாங்கன்னு சொல்றாங்க! தியேட்டர்ல தியேட்டர்காரங்களே காமிராவுல படத்தைச் சுட்டுடுறாங்கன்னு சொல்றாங்க!
            இந்த அக்கிரம, அநியாயங்களில் எதற்காகவாவது போராட முடிகிறதா?
            சரி என்று இந்த கருமங்களைச் சகித்துக் கொண்டு திரைக்கு முன் உட்கார்ந்தால் நாயகன் அநியாயத்துக்கு எதிராகத் திரையில் போராடுவார் பாருங்கள்...
            என்ன செய்வது? எப்போது பாட்டு வரும் என்று காத்திருந்து, அப்போது நாற்றம் பிடித்த டாய்லெட்டுக்குப் போய் உச்சா போய்க் கொண்டே அழுது விட்டு வர வேண்டியதுதான்.
            120 ரூபாய் டிக்கெட்டுக்குக் கொஞ்சம் டாய்லெட்டைச் சுத்தமாக்க என்ன செலவாகிடப் போகிறது என்று யாரிடமும் கேட்க முடியாமல் பொங்கிக் கொண்டே வீடு வந்து சேர்வதைத் தவிர வழியில்லை.
            இதில் வரிச்சலுகை வேறு வாங்கிக் கொள்கிறார்கள் மக்களே! ஆனால், நாம் கார்டைத் தேய்த்து பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற நினைத்தால் 100 க்கு 1.50 கமிஷன் கேட்கிறார்கள் மக்களே!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...