28 Jan 2017

அன்பின் தூர்


அன்பின் தூர்
அன்பு செலுத்த
கல்லிருந்தால் போதும்
பின் அதுவும்
மண்ணாய்த் தூர்ந்து விடும்
மண்ணிருந்த இடத்தில்
கழிவுகள் வந்து சேரும்
கழிவுகள் மேல்
கொள்ளும் காதலில்
மரங்கள் செழிக்கும்
அது
ப்ளாஸ்டிக் கழிவா
என்பதைப் பொருத்து!
*****

அங்குலம் மேல் அங்குலம்
நீ
தூக்கி எறியும்
பாலிதீனில்
பூமியின் சில அங்குலங்கள்
மூடிக் கொள்ளும்!
அங்குலம் அங்குலமாய்
மூடிய பின்
அங்குலம் அங்குலமாய்
விடுவிப்பது
சாதாரணமில்லை!
நாம் எல்லோரும் எறிந்த
பாலிதீன்
அங்குலம் அங்குலமாய்
மூடியிருக்கும் பூமியை!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...