50
நாள் கணக்கு
அடுக்கடுக்காக
பிரச்சனைகள் வரவே அயர்ந்துப் போனார் சமத்து சம்புலிங்கம். பட்ட காலிலே படும், கெட்ட
குடியே கெடும் என்பது போல ஆகி விட்டது சம்புலிங்கத்தின் நிலைமை.
அடி
மேல் அடி அடித்தால் அம்மியே நகரும் போது, சம்புலிங்கம் நகர மாட்டாரா?
சம்புலிங்கம்
ஒரு சோதிடரை நோக்கி நகர்ந்தார்.
"என்
பிரச்சனையெல்லாம் எப்போ தீரும்?" என்றார் தடாலடியாக.
சோதிடர்
ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்த்து, "சரியா ஐம்பது நாள்ல உங்க எல்லா பிரச்சனைகளும்
முடிவுக்கு வந்துடும்! அது வரைக்கும் நீங்க எல்லா கஷ்டத்தையும் பொறுத்துக்கணும்!"
என்றார்.
"அப்படி
50 நாள்ல தீரலேன்னா?" சம்புலிங்கம் சந்தேகமாகக் கேட்டார்.
"அந்த
ஐம்பது நாள்களுக்குள்ள அதையெல்லாம் தாங்கிக்கப் பழகிக்கணும்! பழகிப் போச்சுன்னா அப்புறம்
எதுவும் பெரிய கஷ்டமா தெரியாது!" சோதிடர் சொல்ல, சம்புலிங்கம் அவருக்குப் பணத்தைக்
கொடுக்காமலே கோபத்தோடு வெளியேறினார்.
*****
No comments:
Post a Comment