26 Jan 2017

பேச்சு வியாபாரிகள்


ஊட்டல்
சோறூட்டும் தாயொருத்தி
வேடிக்கைப் பார்ப்பவர்கள் எல்லாம்
ஊட்டிச் செல்கிறாள்
பசியை!
*****

எதிரிகள்
பகல் வந்து விட்டால்
மிருகமாகி விடும் நினைவுகள்
இரவாகி விட்டால்
உறங்கி விடுகின்றன.
கனவுகளில் அவைகள்
தெய்வீக வடிவம் கொள்கின்றன.
பிறகு எனக்குத்
தெரிய வந்தது
நினைவுகளும், கனவுகளும்
எதிரிகள் என!
*****

பேச்சு வியாபாரிகள்
கடலைப் பார்த்தவர்கள்
யாருமில்லை என்றார்கள்!
நான் கடலைப் பற்றி
பேசத் துவங்கினேன்!
கேட்டவர்கள்
கரையொதுங்கிக் கிடந்தார்கள்!
நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன்!
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...