நீர்க்குமிழ் வேண்டுபவர்கள்
நீர்க்குமிழ்தான்
வேண்டும்
என்பவர்களுக்கு
எடுத்துக்
கொடுப்பதில்
என்ன
இருக்கிறது?
வாங்கிக்
கொள்ள முடியுமா
உடைந்து
போன
அவர்களால்?!
*****
காலப்பகடை
பதவி
அதிகாரம்
வெறி
தற்பெருமை
மாவீரம்
ஞானம்
விஞ்ஞானம்
எப்போது
வேண்டுமானாலும்
உருண்டு
விளையாட
ஆரம்பிக்கும்
காலம்
உருட்டும்
பகடைக்காய்களாய்!
*****
No comments:
Post a Comment