போதும்
"சேர்ந்து
வாழ்ந்தது போதும் என நினைக்கிறேன்!" என்றார் திருமணமாகி
40 வது நாளில் விவாகரத்துக்கு மனு செய்த மனிஷா.
*****
சுத்தம்
தெருவைக்
கூட்டி சுத்தம் செய்யும் மாயக்காவின் தெருவுக்கு யாரும் சென்றதில்லை.
*****
உடைந்த
நெஞ்சம்
கூழாங்கல்லைத்
தூக்கி பிச்சைப் பார்த்திரத்தில் போட்ட போது, பிச்சைக்காரர்
சொன்னார், "இதையாவது போடணும்னு தோணுச்சே!".
நொறுங்கிப் போனார் கல்நெஞ்சக்காரர்.
*****
No comments:
Post a Comment