11 Jan 2017

குருநாதர்கள்


சந்தோசம்
கிடைத்தால் சந்தோசம் என்க
கிடைக்காவிட்டால் அதை விட சந்தோசம் என்க
கிடைத்தால் ஆர்வத்தோடு செய்க
கிடைக்காவிட்டால்
அதை செய்ய வாய்ப்பின்றி போவதாகுக
பிடித்ததைச் செய்ய வாய்ப்பு கிடைத்ததாகுக
*****

குருநாதர்கள்
சில முட்டாள்களை நம்பி
ஏமாறக் கூடாது என்ற பாடத்தை
ஏமாற்றும் முட்டாள்கள்தான் கொடுக்க முடியும்
உன்னதமான பாடங்களை
வழங்கிச் செல்லும் அவர்கள்
மகத்தான குருநாதர்களைப் போல!
*****

மணல் வரலாறு
அள்ளிக் கொண்டு போவார்கள்
என்று
தெரிந்தும்
ஆண்டுதோறும்
அடித்துக் கொண்டு வருகிறது
ஆறு
மணலை!
*****

No comments:

Post a Comment