11 Jan 2017

விசாரணை


வேலை
பிரபல தாதாவைப் பிடிக்க மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன்.
*****

விசாரணை
சாமியார் பெயரில் ஆயிரம் கோடி சொத்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
*****

தடை
தடைசெய்யப்பட்ட புத்தகம் கோடிக் கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
*****

எதிர்பார்ப்பு
காமராஜரைத் தோற்கடித்த மக்கள் பேசிக் கொள்கிறார்கள், "காமராஜர் ஆட்சி போல வராது!"
*****

எதையும் செய்வான்
"நம்புனவங்களுக்காக எதையும் செய்வேன்டா!" பஞ்ச் பேசிய ஹீரோ சண்டைப் போட டூப்பை வரச் சொன்னான்.
*****

No comments:

Post a Comment