15 Jan 2017

நெருப்புடா!


நெருப்புடா!
படம் ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்தில் ஏ.சி. ஆப் செய்யப்பட்டதில் "நெருப்புடா!" என்று கத்தினார்கள் கபாலி படம் பார்த்த ரஜினி ரசிகர்கள்.
*****

சபதம்
"இந்த மூஞ்சுக்கெல்லாம் எவன் வேலை கொடுப்பான்?" என்ற கேள்வியில் பெங்கி எழுந்த ஆனந்தி, சுயதொழில் தொடங்கினாள் பியூட்டி பார்லர் ஆரம்பித்து.
*****

பக்தி
கப்பலில் ஏற்றுவதற்கு முன் ஒரு முறை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார் சிலை கடத்தல் வியாபாரி பரமதயாளன்.
*****

வாய்ப்பு
தயாரிப்பாளர் கொடுத்த ஒரு நிமிஷ நேரத்தில் ஆறு பத்து செகண்ட் கதைகளைச் சொல்லி அசத்தினான் உதவி இயக்குநர் பாரதி சந்தர்.
*****

No comments:

Post a Comment