கவனம்
வேர்
விடுதலை
நினைவூட்டுகிறது
மின்னல்
இலைகளின்
அதீத சலசலப்பை
ஞாபகம்
கொள்ளச் செய்கிறது இடி
விழும்
மழையை
எழுச்
செய்ய வேண்டும்
என்பதை
கவனம்
கொள்ளச் செய்கிறது
மரம்!
*****
மாற்றம்
வானவில்லில்
நீ
ஒரு வண்ணமாக
இருப்பாய்
என்று
நினைத்தேன்!
நீயோ
வளைவாக
இருப்பதாகச்
சொன்னாய்!
பூமியில்
நீ ஒரு
தேவதையாக
இருப்பதாகச் சொன்னேன்!
நீயோ
நட்சத்திரமாக
இருப்பதை
நினைவூட்டினாய்!
நான்
எப்படிச் சொன்னாலும்
நீ அப்படி
இருப்பதற்கில்லை
என்பது
தெரிந்தாலும்
நான்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்!
நீ மாறிக்
கொண்டே இருக்கிறாய்!
*****
No comments:
Post a Comment