சிரிப்பு
அங்குதான்
வாய்ப்பு
இருக்கிறது
உறக்கத்தில்
சிரிப்பவர்களுக்கு!
*****
இன்னொரு மலர்
"மலருக்கு
நண்பன்!"
என்ற
என்னை
நீ
"தென்றலா?
வண்டா?
பட்டாம்பூச்சியா?"
என்றாய்!
"இன்னொரு
மலர்!"
என்றேன்
நான்!
*****
விழும் நிலா
கிணற்றைத்
தூர்த்த பின்
சாலையோரம்
தேங்கிக்
கிடக்கும்
நீரில்
விழுந்து
விட்டுச் செல்கிறது
நிலா!
*****
No comments:
Post a Comment