13 Jan 2017

சைலன்ஸ் ப்ளீஸ்


முதல் காரியம்
அப்பா இறந்ததற்காக அமெரிக்காவிலிருந்து வந்த அபிஷேக் முதல் காரியமாக பிரீசரில் இருந்த அப்பாவோடு ஒரு செல்பி எடுத்துக் கொண்டான்.
*****

பிரெண்ட்ஷிப்
காலேஜில் யாருடனும் பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளாத மதன், எல்.ஐ.சி. ஏஜென்ட் ஆனதும் பேஸ்புக்கில் எல்லாருக்கும் பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பிக் கொண்டிருந்தான்.
*****

உடைப்பு
பூட்டிய கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சாவியைத் தொலைத்த கணேஷ்.
*****

சைலன்ஸ் ப்ளீஸ்
என்ன செய்வதென்று தெரியவில்லை, "சைலன்ஸ் ப்ளீஸ்!" என்று சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் பார்த்து அழுத குழந்தையை.
*****

No comments:

Post a Comment