13 Jan 2017

கஷ்ட ஜீவனம்


அழகான கவிதை
மனதை விட்டு
வெளிவர மறுக்கும்
அந்தக் கவிதையே
ஆகச் சிறந்த
கவிதையாகப் படுகிறது
ஒரு குழந்தையின்
பிடிவாதத்தைப் போல!
*****

வாசனை
அப்பத்தா காலத்து
வாசனையை
மணமணக்கச் செய்கிறது
வீடு முழுவதும்
அம்மியைத் தேட வைத்து
அரைக்கச் செய்த
மின்வெட்டுப் பொழுது!
*****


கஷ்ட ஜீவனம்
பிள்ளைக்கொரு பென்சில்
வாங்கித் தர முடியாத
கஷ்ட ஜீவனத்தோடு போராடுகிறார்
ராவானதும் ராவாக
குவார்ட்டரோ, ஆப்போ, புல்லோ
போட்டு வரும் அப்பா!
*****

No comments:

Post a Comment