14 Jan 2017

கனவு காண்பவன்


பேஸ் டூ பேஸ்
"என் முகத்தைப் பார்த்துச் சொல்லு!" என்ற நிவினைப் பார்த்து, "ச்சீ! போடா! பேஸ்புக்ல போட்ருக்கேன் பாருடா!" என்று வெட்கத்துடன் சொல்லி விட்டு ஓடினாள் மலர்.
*****

கனவு காண்பவன்
ஓயாது பெஞ்சைத் தட்டிக் கொண்டிருந்த மாணவனை எழுப்பி, "உன் வருங்கால கனவு என்ன?" என்று கேட்டார் ஆசிரியர். மாணவன் சொன்னான், "எம்.எல்.ஏ. ஆவது!"
*****

பதில்
"மிகப்பெரிய பாலைவனம் எது?" என்ற கேள்விக்குப் பதில் எழுதினான் கதிர், "காவிரி டெல்டா!"
*****

வரவேற்பு
அரசியலில் பெரிய ஆளாக வர முடியாத விரக்தியில் தன் கட்சியின் எம்.எல்.ஏ.வைக் கன்னத்தில் அறைந்த சுந்தருக்கு எதிர்க்கட்சியில் வரவேற்பு காத்திருந்தது.
*****

No comments:

Post a Comment