ஆதிகாலத்துப் பணமில்லா பரிவர்த்தனைகள்
இப்போது
பணமில்லா பரிவர்த்தனைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார்கள். அப்படித்தான் பரிவர்த்தனையைச்
செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஆதிகாலத்தில்
நாம் அப்படித்தான் செய்தோம் தல. அப்புறம் இவர்கள்தான் பணத்தைப் பயன்படுத்த வேண்டும்
என்று கட்டாயப்படுத்தினார்கள். அதுதான் எளிமையான பரிவர்த்தனை என்று விளக்கம் வேறு அளித்தார்கள்.
எங்கள்
அப்பத்தா, அம்மத்தா காலத்தில்தான் அப்படித்தான். உப்பை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்க
மாட்டார்கள், நெல்லைத்தான் கொடுப்பார்கள். சங்கூதிக்கும், வயல்காவல் பார்ப்போருக்கும்
நெல்லைத்தான் அளப்பார்கள்.
ஐஸ்
கூட நெல்லைக் கொடுத்துதான் வாங்கியிருக்கிறார்கள். சமயத்தில் புளி, மிளகாய் கொடுத்துக்
கூட வாங்கி இருக்கிறார்கள்.
தேங்காய்
பறிக்க வரும் அண்ணாச்சிக்கும் பணம் கொடுத்தது கிடையாதாம். நான்கைந்து தேங்காய்களைத்தான்
கொடுத்து இருக்கிறார்கள்.
உழுந்தைக்
கொடுத்து பயிறை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பயிறைக் கொடுத்து உழுந்தை மாற்றியிருக்கிறார்கள்.
எள்ளுக்குப்
பதில் துவரை. துவரைக்குப் பதில் மொச்சை. மொச்சைக்குப் பதில் சோளம். சோளத்திற்குப்
பதில் தினை. தினைக்குப் பதில் கம்பு. கம்புக்குப் பதில் கேழ்வரகு. இப்படித்தான் இருந்திருக்கிறது.
சமீப
காலம் வரை, ஏன் இப்போது வரை கூட பக்கத்துக் கடை அண்ணாச்சி ஐம்பது காசையோ, ஒரு ரூபாயையோ
கண்ணில் காட்டாமல் சாக்லேட் மிட்டாய்களைத்தான் பணமில்லா பரிவர்த்தனையாகப் பயன்படுத்துகிறார்.
இதெல்லாம்
பழைய கான்செப்ட்தான் தல! ஆனால் நாம் இப்படி ஆரம்பித்து விட்டால் வரியைக் கட்டாமல் நாம்
ஏமாற்றி விடுவோம் என்று நினைக்கிறார்கள். அதற்காகத்தான் ஆதாரப்பூர்வமாக அதை கணக்கில்
வரும் வகையில் கார்டு மூலம், இணையவழி மூலம் செய்யச் சொல்கிறார்கள்.
இதை
நாம் புரிந்து கொள்ளாமல் கருப்புப் பணத்தை ஒழிக்க இதுதான் சிறந்த வழி என நினைத்துக்
கொண்டு இருக்கிறோம்.
*****
No comments:
Post a Comment