சிறகுகள் விற்பனைக்கு
பறக்கச்
சிறகுகள் இருந்தும்
நடந்து செல்லும்
பறவைகள்
போல்தான் இருக்கின்றன
தனியார்
பள்ளிப் பிள்ளைகள்!
என்றோ ஒரு
நாள்
பறக்க அறியும்
போது
சிறகுகளை
வெட்டி விற்று
வாங்கி விடுவார்கள்
வேலை என்ற
அற்புதத்தை!
*****
கர்வம் 2.0
ஒரு சுத்தியல்
போதும்
ஆயிரம் ஆணிகளை
அறைய!
கர்வம் ஒன்று
போதும்
ஆயிரம் சிறப்புகளை
அழிக்க!
தீக்குச்சியின்
முனை போல்
இருக்கும்
கர்வம்
எரிந்தும்
அழியலாம்
நமத்தும்
ஒழியலாம்
சமீப நாள்களாக
மனசு எனும்
பெட்டிக்குள்
இருக்கும்
கர்வம்
கூழைக் கும்பிடு
போட்டுக்
கொள்கிறது
தன்னை வளர்த்துக்
கொள்ள!
வளர்த்துக்
கொண்ட பின்
எல்லோரையும்
போட வைக்கிறது
கூழைக் கும்பிடு!
*****
No comments:
Post a Comment