14 Jan 2017

பூர்வகுடிகளும், வந்தேறிகளும்


பூர்வகுடிகளும், வந்தேறிகளும்
விரிவாக்கப்பட்ட சாலையில்
வெட்டப்பட்ட
பனைமரத்தின் அடியில்
நுங்கு விற்றுக் கொண்டிருக்கிறான்
பூர்வகுடி!
ஏ.சி. போட்டு
மேசை நாற்காலிகள் விரித்து
கோலாவும்,
பீட்சாவும், பர்கரும்,
விற்றுக் கொண்டிருக்கிறான்
வந்தேறி!
*****

நகர்வலம்
விழுந்து புரண்டு
சாக்கடை பூசிய
பன்றிகளோடு
நகர்ந்து கொண்டு இருக்கிறது
சாயமும்
கிரீமும் பூசிய
ஆடவர்களையும், அழகிகளையும்
இணைத்துக் கொண்டு
விரையும் நகரம்!
*****

பெருமகிழ்ச்சி
பெற்றப் பொழுதினும்
பெருமகிழ்ச்சி
தாய்க்கு
மம்மி என்றழைத்த
மழலைச் சொல் கேட்டு!
*****

No comments:

Post a Comment