12 Jan 2017

தெரியாத நம்பர்


தூது
தலைவிக்கு தலைவன் விட்ட தூது ஓலையை எடுத்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது டிவிட்டர்.
*****

தர்மங்கள்
ஆற்றிலிருந்து நான்கு கூடைகள் மணல் அள்ளியதற்காக கைது செய்யப்பட்ட குப்புசாமி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார், மணல் லாரி கோவிந்தசாமி இன்ஸ்பெக்டருடன் கை குலுக்கிப் பேசிக் கொண்டு இருப்பதை.
*****

தெரியாத நம்பர்
இன்ஸ்பெக்டர், மகளின் வாட்ஸ் அப் நம்பர் கேட்க, "அப்படின்னா என்னா?" என்று தடுமாறி நின்றார், ஓடிப் போன மகளைப் பற்றி புகார் கொடுக்க வந்த தந்தை.
*****

முதல் முறையாக...
தவறிய அழைப்புகளுக்கு பதில் பேச விரும்பாத தர்மலிங்கம், முதன் முதலாகப் பேசினார் பேன்சி நம்பரிலிருந்து வந்திருந்த அந்த தவறிய அழைப்புக்கு.
*****

நேரம்
சிக்னல் நன்கு கிடைக்கத் தொடங்கியதும், சார்ஜ் போயிருந்தது மொபைலில்.
*****

No comments:

Post a Comment