கூழாங்கல் பாட்டு
தண்ணீருக்குள்
கேட்கும்
கூழாங்கல்லின்
பாட்டு
விரிந்து
கிடக்கிறது
ஆற்றுவெளி
மணலாய்!
*****
இல்ல ஆனா இருக்கு!
குடிநீர்
கொடுக்கும்
ஏரிகளில்
நீல்
இல்லாவிட்டாலும்
டாஸ்மாக்கில்
பீர்
இருக்கு
கலந்து
குடிக்க
மினரல்
வாட்டர் பாட்டில்
நீர்
இருக்கு!
*****
பாத்திரம்
கடவுள்
படத்துடன்
பிச்சைப்
பாத்திரம்
நீட்டப்படும்
போது
குழம்ப
வேண்டியிருக்கிறது
கேட்பது
கடவுளா?
மனித
அவதாரம்
எடுத்து
வந்த
தேவபுருஷனா?!
*****
No comments:
Post a Comment