மரணக் குறிப்புகள்
மரணம்
வருவதுமில்லை
போவதுமில்லை
அது அங்கேயே
இருக்கிறது
தேவையென்றால்
எடுத்துக்
கொள்ளும்
இல்லையென்றால்
விட்டு
வைக்கும்
யாரை
வேண்டுமானாலும்
எப்போது
வேண்டுமானாலும்
தொடலாம்
மரணம்
மரணம்
குறித்து
ஆயிரம்
குறிப்புகள்
இருப்பினும்
முக்கியமானது
தனக்கான
மரணம்
நேர்ந்தது
அறியாது
ஒருவன்
மரணித்துப்
போவதுதான்!
*****
கைவிரிப் படலம்
தப்பித்து
விடலாம் என்று
நம்பி
விழும்
மரணமும்
கைவிரித்து
விடுகிறது
அகதியெனச்
சிக்குகையில்!
*****
No comments:
Post a Comment