பர்ஸ்டை வெறுத்து, லாஸ்ட்டை விரும்பு!
குத்துச்
சண்டைப் போட்டிக்கு சென்ற ஒரு மாணவி பிணமாகத் திரும்பினால் எப்படி இருக்கும்?
தமிழகத்தில்
அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அந்தப்
பெண்ணுக்கு குத்துச் சண்டை மேல் அப்படி ஒரு ஆர்வம். சில மாதங்கள் பயிற்சியிலேயே போட்டியில்
கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாள்.
ஆர்வம்
குழந்தைகளை உந்தித் தள்ளுகிறது. அவர்களுக்கு உரிய உடல் பலத்தை நாம் கொடுத்தோமா?
குழந்தைகளுக்கு
பட்டினியைக் கொடுக்கிறோம். அல்லது சக்கையான உணவைக் கொடுக்கிறோம்.
நமது
கதைகள், திரைப்படங்கள், நம்மைச் சுற்றியுள்ள தன்னம்பிக்கை கருத்துகள் வெற்று ஆர்வத்தை
உண்டு பண்ணுகின்றன. எதையாவது சாதிக்க வேண்டும் என்று தூண்டுகின்றன.
உன்னைத்
தனித்து அடையாளப்படுத்திக் கொள் என்று கட்டாயப்படுத்துகின்றன.
நமது
அடிப்படைகள் நொறுங்கி நம் மீதே விழுவதை நாம் கவனிக்க மாட்டோம்.
வெறும்
தனிமனித சாதனைகளால் நமது வரலாற்றை நிரப்பி வைத்து இருக்கிறோம்.
இதனால்
ஷாஜகானாக ஆசைப்படுவார்கள். தாஜ்மஹாலை உருவாக்ககும் சிற்பியாக ஆசைப்பட மாட்டார்கள்.
கரிகாலன் ஆக ஆசைப்படுவார்கள். கல்லணையை உருவாக்கும் பொறியாளனாக ஆசைப்பட மாட்டார்கள்.
அந்த தாஜ்மஹாலையும், கல்லணையையும் உருவாக்கிய கல் சுமந்த தொழிலாளியாக சத்தியமாக யோசிக்கக்
கூட மாட்டார்கள்.
அவர்கள்
சுமந்த கல்லே தாஜ்மஹாலையும், கல்லணையையும் நிலைக்கச் செய்து கொண்டு இருக்கின்றன.
அஸ்திவாரங்களைப்
புதைத்தது போல பல எளிய மனிதர்களின் வரலாறும், அவர்களின் அற்புதமான வாழ்வும் நம் மண்ணில்
புதையுண்டுப் போய் விட்டன.
குழந்தைகளிடம்
சொல்லுங்கள்! உடலை முதலில் நன்றாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று.
வலிய
முயற்சித்து எதையும் செய்யச் சொல்லாதீர்கள். அவர்கள் அப்படி முயன்றாலும் அதைச் சுட்டிக்
காட்டுங்கள்.
சில
நேரங்களில் சாதிக்காமல் இருப்பது கூட சாதனைதான்.
வாழ்க்கை
என்ன சாதிப்பதற்கான பலி கூடமா?
அந்தக்
குத்துச் சண்டை நடந்த இடத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லை.
அவ்வளவுதான்
நாம் குழந்தைகள் மீது காட்டும் அக்கறை.
போட்டிகளும்,
சாதனைகளும் நம் அக்கறைகளை கடாசி வீசி விடுகின்றன. இலக்கு ஒன்றே நோக்கு என்று அறிவை
அரைகுறையாக்கி விடுகின்றன.
எந்தக்
குத்துச் சண்டைக்காரன் ஓடி வந்து பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் வன்கொடுமையைத் தடுத்து
விட்டான் சொல்லுங்கள். அவனுக்குத் தேவையான பரிசினை போட்டியில் வாங்கிக் கொண்டு அவன்
போய்க் கொண்டே இருக்கிறான்.
சாம்பியனாகி
சம்பாதிப்பது சாதனையாகவும், சாமான்யனாக சம்பாதித்து வாழ்வது சோதனையாகவும் ஒரு பிம்பம்
இங்கு இருக்கிறது.
சாம்பியன்
சம்பாதிப்பதில் என்ன சாதனை இருக்கிறது? அவனிடம் பணத்தைக் கொட்டதான் அறமற்ற முறையில்
வணிகம் செய்யும் ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றனவே.
சாமான்யனாக
சம்பாதிப்பதில்தான் சாதனை இருக்கிறது!
ஸ்டேட்
பர்ஸ்ட், நேஷனல் பர்ஸ்ட் என்று வந்த பிறகுதான் காசு பார்க்கும் தொழிலாக மாறிக் கொண்டு
இருக்கிறது மருத்துவமும், பொறியியலும். அதற்கு முன் சேவையாகத்தான் செய்தார்கள் மருத்துவர்களும்,
பொறியாளர்களும்.
நம்
பர்ஸ்டுகள் பின் ஒளிந்திருப்பது பிள்ளைகளை வைத்து காசு பார்க்கும் மனநிலை அல்லது சாதிக்கச்
செய்து அதைப் பார்த்து மகிழும் ஒரு குழம்பிய பைத்தியக்கார மனநிலை.
நீங்கள்
ஒரு பர்ஸ்டை உருவாக்க நினைத்தால், இந்த சமுதாயத்துக்கு நீங்கள் பணம்புடுங்கி மிஷினை
தயாரித்துக் கொடுக்கிறீர்கள்.
*****
No comments:
Post a Comment