10 Jan 2017

அம்மன் கோயில் திருவிழா


அம்மன் கோயில் திருவிழா
அம்மன் என்ற பெண்ணுக்காவும்
நள்ளிரவில் ஆடும் பெண்களுக்காகவும்
அம்மன் கோயில் திருவிழா!
*****

உறுத்தல்
கண்ணில் விழுந்து
மனதில் உறுத்துகிறது
மணல் லாரி விசிறிச் செல்லும்
ஆற்றுமணல்.
*****

பெரிதினும் பெரிதாக
அப்படியென்ன
பெரிதாகக் கேட்டு விட்டான்,
"படிப்பதற்கு ஒரு சீட்!"
பெரிதினும் பெரிதாகக் கேட்பதாக
நினைத்துக் கொண்டு
அவனும் கேட்கிறான்
சீட்டொன்றுக்கு
ஐந்து லட்சம்!
*****

No comments:

Post a Comment