இரக்கமற்ற தாக்குதல்
நீங்களும்
உங்கள்
படைகளும்
இரக்கமின்றித்
தாக்குவதைப்
பொறுத்துக்
கொண்டு இருக்கிறேன்!
நீங்கள்
களைப்புறும் பொழுதில்
இரக்கமின்றித்
தாக்க!
வாய் பிளந்து
வயிறு
பிதுங்கிக் கிடக்கும்
என் குதிரையைக்
கேளுங்கள்
இரக்கமின்றித்
தாக்குவதைப் பற்றி!
தாகமும்
பசியும்
உங்களுக்கும்
வரும்!
அப்போது
நீரையும்,
உணவையும்
மறைப்பேன்
என் இரக்கமற்றத்
தாக்குதலைப் பற்றி
நீங்கள்
புரிந்து கொள்ள!
*****
வானவில் பார்வை
வானவில்லுக்காக
காத்திருந்தவன்
மழை வந்ததும்
பயந்து
ஓடினான்!
மழை நின்றதும்
வந்த
வானவில்
பயந்தோடியவனைப்
பின்னால்
இருந்தபடியே பார்த்து
புன்னகைத்துக்
கொண்டிருந்தது!
*****
No comments:
Post a Comment