23 Dec 2016

அமெரிக்காவின் ஆணாதிக்கச் சிந்தனை


அமெரிக்காவின் ஆணாதிக்கச் சிந்தனை
            திரைப்படம் ஆண்களையே நாயகர்களாகக் காட்டுகிறது. பெண்களை நாயகர்களாகக் காட்டுவதில்லை. அரிதின் அரிதாக ஒரு சில திரைப்படங்களில்தான் பெண்கள் நாயகர்களாக இருக்கிறார்கள்.
            நடைமுறை வாழ்க்கையும் திரைப்படத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதாக இல்லை. அதன் நகலாகத்தான் இருக்கிறது.
            பெண்கள் தலைமை பதவிக்கு வருவதும் இப்படித்தான் இருக்கிறது.
            உலகில் பெண்களின் தலைமையை சில நாடுகளில்தான் எப்போதாவது பார்க்க முடிகிறது அத்தி பூத்தாற் போல. அதை அமெரிக்காவில் கூட பார்க்க முடியாது போனது துரதிர்ஷ்டமே.
            பெண்களால் தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட முடியுமா என்ற சந்தேகம் இன்னும் மனதின் அடிஆழத்தில் பலருக்கு இருக்கதான் செய்கிறது.
            ஹிலாரியால் ஒரு பெண்ணாக அமெரிக்காவின் தலைமையைச் சமாளிக்க முடியுமா? என்று அமெரிக்கர்களின் மனதில் எழுந்த ஒரு சிறு சந்தேகப் பொறியே அவரை இந்தத் தேர்தலில் தோற்கடித்திருக்கிறது.
            கருத்துக் கணிப்பை மீறியும் டிரம்ப் ஜெயித்து இருக்கிறார் என்றால், ஒரு பெண்ணாக உலகின் வல்லரசான அமெரிக்காவை ஹிலாரியால் ஏற்று நடத்த முடியாது என்று கருதிவிட்ட சராசரியான ஆணாதிக்கச் சிந்தனைதான் அதைச் செய்திருக்க வேண்டும்.
            ஹிலாரி தோற்று விட்டார்.
            டிரம்ப் வென்று விட்டார்.
            அடிப்படையில் எங்கோ தவறு இருக்கிறது.
            இது மனோபாவத்தின் தவறே!
            தமிழகம் பரவாயில்லை.
            இரண்டாவதாகவும் ஒரு பெண்ணையே தலைவராக்க காத்துக் கொண்டு இருக்கிறது.
            பெண்மை வாழ்வென்று கூத்திடுவோமடா என்று பாடிய பூமி அல்லவா!
            அமெரிக்காவும் அதற்குத் தயாராக வேண்டும்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...